தமிழில் திரைக்கு வந்த ‘சொல்லாமலே’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘டிஷ்யூம்’, ‘பூ’, ‘ஐந்து ஐந்து ஐந்து’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, தெலுங்கில் ‘சொல்லாமலே’ ரீமேக்கான ‘சீனு’ ஆகிய படங்களை இயக்கியவர், சசி. இப்போது ஹரீஷ் கல்யாண், ‘வெந்து தணிந்தது காடு’ சித்தி இத்னானி ஜோடியாக நடிக்கும் ‘நூறு கோடி வானவில்’ படத்தை இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் கோவை சரளா, தம்பி ராமய்யா, சின்னி ஜெயந்த் நடித்துள்ளனர்.
பாலாஜி காப்பா, அருண் அருணாசலம் தயாரித்துள்ளனர். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்துவிட்டது. விரைவில் திரைக்கு வரும் தேதி அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை தயாரித்த அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை சசி இயக்குகிறார். இதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.